சென்னையில் விநாயகர் சிலைகள்: உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டுப்பாடுகள்

mad vina
வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் சென்னை உயர்நீதி மன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை

* 10 அடிக்கு மேல் விநாயகர் சிலையை அமைக்கக்கூடாது.

* எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் விநாயகர் சிலை அமைக்கக்கூடாது.

* களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.

* காவல்துறை அனுமதிக்கும் நாளில்தான் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும்.

* விநாயகர் சிலைகளை கரைப்பதில் சுற்றுசூழல் வாரிய விதிமுறைகளை பின்பற்ற
வேண்டும்.

மேற்கண்ட விதிகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response