வடிவேலுவின் கலக்கல் காமெடியில் மீண்டும் ’23ஆம் புலிகேசி பார்ட் 2′ ! ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

Vadivelu11_b
கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் நடிகர் வடிவேலுவிற்கு திரைப்பட வாழ்வில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் முழுநீள நகைச்சுவை திரைப்படம் என்று விருது பெற்றது குறிப்பிட தக்கது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து, 2006ம் ஆண்டு வெளியான படம் 23 ஆம் புலிகேசி. ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்தால், வெற்றி அடைய முடியாது என்ற கட்டமைப்பை இந்த படம் உடைத்தது. மன்னர் காலத்து ஆட்சியை இந்த படத்தில் விமர்சிப்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் நிகழ்காலத்தின் சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைந்தது.

பிளாக் காமெடி என்ற முறையை கையாண்டு இந்த படத்தை இயக்குநர் சிம்புதேவன் உருவாக்கியிருந்தார். படம் முழுக்க காமெடி வசனங்கள் இடம்பெற்றாலும் , அதனுள் ஒரு ஆழமாக அரசியல் பார்வையும் விதைக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் வடிவேலுவின் வசனங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. “எதிர் காலத்தில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவாப் போகிறது’, நீர் அடிக்கடி மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து விடுகிறீர்கள்” என்ற வசனங்கள் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
23 pulikesi
தனது டுவிட்டர் பக்கத்திலும் இது தொடர்பான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். பில்லா 2 வில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response