முதல்வர், துணை முதல்வர் வருகைக்கு அரியலூரில் கறுப்புக்கொடி!

mgr

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி பேனர், கட்அவுட்டுகளுடன் அரியலூர் அமர்க்களத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் அரியலூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், டி.பழூர், வெண்மாகொண்டான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.

ariya

தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இது குறித்து அனைத்துக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில்:-

“எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசுப் பணத்தைத் தேவையில்லாமல் முதல்வர் பழனிசாமி செலவு செய்கிறார். விவசாயிகள் பிரச்னை குறித்து மக்கள் நலனுக்காக அவர் எதுவும் பேசவில்லை. இணைப்புக்குப் பிறகு, எம்.எல்.ஏ-க்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் முதல்வரும் துணை முதல்வரும் ஈடுபட்டுவருகின்றனர். மக்கள் பிரச்னைகளில் இந்த அரசுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை. மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து அந்தக் கறுப்புக்கொடி கட்டும் போராட்டம் நடக்கிறது” என்று தெரிவித்தனர்.

Leave a Response