நீட் தேர்வில் ஓசூர் மாணவன் முதலிடம்! எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு

supreme_court

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு 31692 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

neetw

நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் காணலாம்.

கடிதம் மூலம் அழைப்பதற்கு நேரம் குறைவாக உள்ளதால் கலந்ந்தாய்வுக்கு தொலைபேசியில் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response