பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளர் திடீர் மாற்றம்!

kumar

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு சலுகை வழங்குவதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் ரூபா குற்றம் சாட்டினார். இதை டி.ஜி.பி. சத்திய நாராயணா மறுத்தார். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஜெயிலுக்குள் சென்று விசாரணை நடத்தினார்கள். முன்னதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூர் மாநகர போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளர் நிஹாம் பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சசிகலா தொடர்பான புதிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீகார் மாவட்ட எஸ்.பி-ஆக பணியாற்றி வந்த நிஹாம் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி தான் பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சசிகலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதல் பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response