பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் சென்னை விசிட் !

amit--shah-600
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலில் அமித் ஷா சென்னை வருவது, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வின் இரு அணிகளும் நேற்று இணையும் என்று கூறப்பட்ட நிலையில், இறுதியில் முடிவு ஏதும் எட்டப்படாமல் தள்ளிப்போனது. அ.தி.மு.க-வின் அணிகளை பா.ஜ.க இயக்குவதாக, தமிழக எதிர்க்கட்சிகள் பரவலான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில்தான் அமித் ஷா சென்னை வரவிருக்கிறார். ஆனால், இவரது சென்னை வருகை குறித்த திட்டங்கள் முன்னரே வகுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வரும் 22-ம் தேதி காலை 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா, அன்று மாலை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா உட்பட கட்சியின் முன்னணி தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். அடுத்த நாள் காலை நடுக்குப்பத்தில் உள்ள ஒரு மீனவரது வீட்டில் சாப்பிட்டு, பின்னர் விவேகானந்தர் இல்லத்தைச் சுற்றிப் பார்க்கிறார். சவேரா ஓட்டலில் கட்சியினருடன் சந்திப்பு, கமலாலயத்தில் மீடியா சென்டர் திறப்பு, செய்தியாளர்கள் சந்திப்பு என இவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், கோவைக்குச் சென்று பொதுத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசுகிறார். பின்னர், 24-ம் தேதி மாலை 4 மணிக்குக் கோவையிலிருந்து டெல்லி புறப்படுகிறார். அமித் ஷா-வுக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Response