இவர்களை பார்த்தாவது அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். கமலின் டுவீட்

assam-i-day-3
நாடு முழுவதும் 71வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அஸ்ஸாமில் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இப்படி வெள்ளம் சூழ்ந்தாலும், சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்ற ஒரு தேச பக்தியுடன், அம்மாநிலத்தில் தூப்ரி மாவட்டம், அருகே உள்ள நொஸ்காராவில் ஆசிரியர் ஒருவர், இடுப்பளவு தண்ணீர் சூழ தன் மாணவர்களுடன் தேசிய கொடி ஏற்றி அதற்கு தக்க மரியாதை செலுத்தினார். இப்படத்தை மிஜானூர் ரகுமான் என்ற ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை பதிவிட்டு இந்த நாளின் மிக சிறப்பான புகைப்படம் இதுவாக தான் இருக்கும். இவர்களை பார்த்து நாட்டின் மீது குடிமக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக அப்படி நடந்துகொள்வதில்லை. மக்களுக்காக இல்லாத அரசியல்வாதிகளை தூக்கி எறிய வேண்டும் என கமல் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Response