மூன்று வாரங்களில் ஆறு சட்டங்களுக்கு ஒப்புதல்! -குடியரசுத் தலைவரின் சுறுசுறுப்பு

Ram-Nath-Kovind-picture

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பிறகுதான் சட்டமாகும்!

அந்த வகையில் கடந்த ஜூலை 25-ம் தேதி குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த், கடற்படை (அதிகார வரம்பு மற்றும் கடல்வழி கோரிக்கைகளுக்கான தீர்வு) சட்ட மசோதாவுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்!

ஆங்கிலேயேர் ஆட்சியில் கடற்படை சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டுமே பெரிய துறைமுகங்கள் இருந்தன. இப்போது பல துறைமுகங்கள் இருப்பதால் கடற்படை சட்டத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்தும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தவிர, குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை (திருத்த) மசோதா, காஷ்மீரில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதற்கான புள்ளியியல் சேகரிப்பு (திருத்த) மசோதா, தகவல் தொழில்நுட்ப (அரசு – தனியார் பங்களிப்பு) சட்டம், அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம், காலணி வடிமைப்பு மற்றும் மேம்பாட்டு சட்டம் ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Response