விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதியில்லையா? அரசின் புதிய விதிமுறை என்ன சொல்கிறது?

vinayagar-idols666-600-jpg
ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தின் உறுப்பினர் செயலர் நா.சுந்தர கோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன. அதனால் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத, எந்தவித ரசாயன கலவையும் கலக்காத கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய, தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் களை அணுகலாம்.

Leave a Response