பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி !

road 2
தர்மபுரி மாவட்டத்தில், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் வாகனங்களை பராமரிக்கும் மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி, தர்மபுரியில் நேற்று நடந்தது. தர்மபுரி ஆர்.டி.ஓ., செந்தில்வேலன் பயிற்சிக்கு தலைமை வகித்தார்.

அசோக் லேலாண்ட் ஓட்டுனர் திறன் மேம்பாட்டு முன்னாள் முதுநிலை மேலாளர் சுரேந்திரன், விபத்தின்றி வாகனங்களை இயக்கும் முறை மற்றும் சிக்னல், போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டி அவசியம், விபத்து காலத்தில் செயல்படும் பாதுகாப்பு முறை குறித்து பேசினார். தொடர்ந்து, செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் முதல் உதவி பயிற்சி கவுரவ செயலாளர் பிரபாவதி, எதிர்பாராத விபத்துக்கு பின், விபத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை மற்றும் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் குறித்து பேசினார்.

இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈஸ்வர மூர்த்தி, மணிமாறன், அன்புசெழியன் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த டிரைவர்கள், கிளீனர்கள், வாகனங்களை பராமரிக்கும் மேலாளர்கள், பள்ளி வாகனங்களில் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Response