’வழக்கு போடுங்கள் பார்க்கலாம்.’ அமைச்சர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். பதிலடி

paner
அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“தற்போது அமைந்துள்ள எடப்படியின் அரசு ஒரு விபத்து அரசு. இந்த அரசு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது குடிநீர் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துரைமுருகன் குற்றம் சாட்டுகிறார்”. சென்னை குடிநீர் பிரச்சனைக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து 2½ டி.எம்.சி. தண்ணீரை பெற்று வந்தேன். இதன்மூலம் குடிநீர் பிரச்சனை தீர்ந்தது.

நான் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவன். அவருக்கு சோதனை வந்த போது 3 முறை என்னை முதல்-அமைச்சராக நியமித்தார். சசிகலா நடராஜன் போடி நாயக்கனூர் தொகுதியில் என்னை தோற்கடிப்பேன் என கூரியுள்ளார். இதில் மக்கள் எனக்கு என்றும் ஆதரவாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ள. மேலும் நாங்கள் தொடங்கி உள்ள தர்மயுத்ததிற்கு தற்போது சோதனை ஆரம்பித்துள்ளது.

மேலும் தொழில் அதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பு வைத்த ஓ.பி.எஸ்.க்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.

சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த நேரத்திலும் தொடர்பு இருந்தது இல்லை. புரட்சித்தலைவி அம்மா வழக்கில் இருந்து விடுதலை பெற திருப்பதி சென்று வழிபாடு செய்தேன். அப்போது திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் சேகர் ரெட்டி என் அருகில் வந்தார். நான் கோவிலை விட்டு வெளியே வரும்போதும் என்னுடன் வந்தார். இதை சிலர் புகைப்படம் எடுத்தனர். மற்றபடி எனக்கும் தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கும் எந்த தொர்பும் இல்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் விசாரணையை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவத்துள்ளார்.

Leave a Response