அமலுக்கு வருகிறது… எட்டாம் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வு!

8exam
தற்போது 1 முதல் 8ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் 24 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. இதையடுத்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது பற்றி விழா ஒன்றில் பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

“5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை கொண்டுவர 24 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அதனால் விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படும். இந்த தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த மாதமே மறுதேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்படும். கல்வியின் தரம் உள்ளிட்ட 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது” என்றார்.

Leave a Response