ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயமில்லை மத்திய அரசின் அதிரடி…

aadhaar356-02-1488460636
மத்திய அரசின் பல சேவை திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு தொடங்க, வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய, காசநோய் நோயாளிகள் இலவச சிகிச்சை பெற, பெண்கள் பேறுகால மருத்துவம் சிகிச்சைக்கு என ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெயின் கூறியதாவது:-

இப்போது வரை ரயில் பயணத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரயில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை தெரிவிப்பதை கட்டாயமாக்கும் திட்டமும் அரசுக்கு இல்லை. சலுகையில் பயணிக்கும் மூத்த குடிமக்கள், டிக்கெட் பரிசோதகர்களிடம் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜனவரி1-ந்தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது.

Leave a Response