மூழ்காத ஷிப் ன ஃபிரெண்ட்ஷிப் தாங்க! உலக நண்பேண்டா தினம் !

frends
ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு உலக நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ம் தேதி ‘உலக நண்பர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. எல்லோருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் போலும் வள்ளுவர்
‘அழிவினவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. என அறிவுறுத்துகின்றார்.

ஒருவரை ஒருவர் பார்க்காமல் நட்பு:-

பார்க்காமலே காதலை பற்றி கேட்டால் அஜித் அவர்கள் நடித்த ‘காதல் கோட்டை’ படம் ஞாபம் வந்திடும். ஆனால் பார்க்காமலே நட்பு பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை .
இன்றைக்கு முகநூலில் பார்க்காமலே நட்பு பாராட்டும் பலருக்கும் இவர்களின் நட்புதான் முன்னோடியாகும்.
பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்களை நம்மால் மறக்க இயலுமா?

கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் . சில ஆண்டுகள் கழித்துசோழன் வடக்கிருக்க ( சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது ) முடிவு செய்தான்.
இதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர் வடகிருக்க முடிவு செய்தனர் .சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான் சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காக த் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.,
மகாபாரதத்தில் நட்பு:-

1. துரியோதனன் – கர்ணண் நட்பு
பாரத கதையில் தான் செஞ்சோற்று கடனை அடைக்க சகோதரர்களுக்கு எதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் நட்பின் சிறந்த உதாரணம் ஆகும்.

2. நட்பிற்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாது ,இதற்க்கு கர்ணன் துரியோதனன் மனைவி நட்பை உதரணமாக சொல்லலாம் . இருவரும் விளையாடும் போது கழுத்தில் உள்ள ஆபரண முத்துக்கள் சிதறிவிட்டது அப்போது வந்த துரியோதனனிடன் எடுக்கவோ கோர்க்கவோ என கூறினான் பதற்றம் இல்லாமல் .

இதைத்தவிர ஸ்ரீக்ருஷ்ணன் – குசேலர் நட்பு, ஸ்ரீ க்ருஷ்ணன் – விதுரர் நட்பு, ஸ்ரீ ராமர் – குகன் நட்பு, ஸ்ரீராமர் – சுக்ரிவன் நட்பு, ஔவையார்- அதியமான் நட்பு போன்றவே புராண இதிகாசம் மற்றும் சங்க இலக்கியங்களில் புகழ்பெற்ற நட்புக்களாகும்.
world-frienship-day

Leave a Response