தாய்ப்பால் இல்லாமல் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு !

ht1483
சர்வதேச தாய்ப்பால் வாரம்… சிறப்புச் செய்தி!

சர்வதேச தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 ம் தேதி) திங்கள் (ஆகஸ்ட் 7) வரை கொண்டாடப்படுகிறது. இதை உணர்த்தும் வகையில் ‘யுனிசெப்’ எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம், டபிள்யு.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார மையம் ஆகியவை, உலக நாடுகளில், தாய்ப்பால் அளிப்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதால், வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முடியும். குழந்தைகள் இறப்பதற்கு, முக்கிய காரணிகளாக, இந்நோய்கள் உள்ளன. தாய்ப்பால் புகட்டுவதால், தாய்மார்களுக்கு, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதை குறைக்க முடியும். இவை, பெண்களின் இறப்புக்கு, முக்கியமான இரு காரணிகளாக உள்ளன.

குழந்தைகளுக்கு போதிய தாய்ப்பால் அளிக்காததால், ஆண்டுதோறும், சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்சிகோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், 2.36 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இந்தியாவில், தாய்ப்பால் புகட்டாமல் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதால், இந்திய பொருளாதாரம் பெரியளவில் பொருள் இழப்பை சந்தித்து வருகிறது.

தாய்ப்பால் புகட்டல் குறித்து, உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் அடனோம் கீப்ரியசஸ் கூறுகையில், ”குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முதல் தடுப்பு மருந்து, தாய்ப்பால் இவை இரண்டிற்கும் ”பல்வேறு வகையான நோய்களை எதிர்க்கும் மருத்துவ குணங்கள், உண்டு,” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response