ரிசர்வ் வங்கி: வீடு-வாகன கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு?

1475579248-6053

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை (ரெப்போ) 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக அறிவித்தது. இதேபோல் வங்கிகள் டெபாசிட் செய்யும் பணத்துக்கான வட்டி விகிதத்தை (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் குறைத்து, 5.75 சதவீதமாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தை கால் சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்திருப்பதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் பங்குச்சந்தை குறியீடுகள் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாணய கொள்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் டாக்டர் சேத்தன் காட், டாக்டர் பாமி துவா, டாக்டர் வைரல் வி ஆச்சார்யா மற்றும் டாக்டர். உர்ஜித் ஆர்.படேல் ஆகியோர் 0.25 சதவீத ரேப்போ விகிதத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். டாக்டர் ரவீந்திர எச்.தோலகியா 0.50 சதவீத குறைப்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். டாக்டர் மைக்கேல் டெபப்ரதா பத்ரா பழைய நிலையே தொடர வேண்டும் என கூறியிருந்தார். அடுத்த நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Leave a Response