அப்பாடா நிம்மதி! ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் இல்லையாம்!!

thotiyam

புதிய ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற போவதாக கடந்த சில நாட்களாவே தகவல் வந்து கொண்டு இருந்தது.

இது குறித்து ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் சுங்வார் கூறுகையில், ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது குறைந்து விட்டதாக கூறப்படுவது வேறு விஷயம். அதை முதலில் ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கும். ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும். அவை மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு கடந்த மாதமே தயாராகி விட்டது. அந்த நோட்டுகள் அடுத்த மாதம் புழக்கத்துக்கு விடப்படும் என்றார்.

Leave a Response