தீயணைப்புத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை ?

fier
அரசுத் துறையில் அந்த பணியில் போதிய நபர்கள் இல்லை, இந்த பணியில் காலியிடம் இருந்தும் அரசாங்கம் தேவையான பணியாளர்களை நியமிக்க வில்லை’ என அடுக்கடுக்காய் எப்போதுமே குற்றச்சாட்டு உண்டு.
அந்த வகையில், தீயணைப்புத் துறையில் இருந்து, ‘100 பேர் வேலை செய்யவேண்டிய இடத்துல 50 பேர்தான் இருக்கோம். அதனால பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது’ என சூடாக ஒரு செய்தி வந்திருகிறது!

தீயணைப்புத் துறைக்கு எங்காவது தீ பிடித்தால் போய் அணைப்பது மட்டும் வேலையில்லை… மழை வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின்போது களமிறங்கி உயிரையே பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது தீயணைப்புத் துறை தான்!

தமிழகத்தில் 317 தீயணைப்பு நிலையங்கள் இருக்கின்றன. இத்தனை நிலையங்களுக்கும் குறைந்தது 6 ஆயிரம் பணியாளர்கள் தேவை! ஆனால், தற்போது இருப்பதோ 3,500 பணியாளர்கள் மட்டுமே என புள்ளிவிவரம் சொல்கிறது!

தேவைக்கு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது. அதன் காரணமாக உடல்நலன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்!

குறிப்பாக பணியாளர்கள் விடுப்பு எடுப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்!

அதேபோல், இத்துறையில் 25 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையாலும், வேலைப் பளுவாலும், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்!

எனவே, பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் சென்று உதவி செய்து வரும் தீயணைப்பு துறையின் மீது தமிழக அரசு கவனம் செலுத்தி, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என தீயணைப்புத் துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த துறைக்கு தேவையான உபகரணங்களை போதுமான அளவில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாங்கம் இவர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு எடுக்குமா? இல்லை வழக்கம்போல் அணிகள் இணைப்பு பற்றி பேசிப் பேசியே ஆட்சிக்காலம் முழுக்க ஓட்டிவிடுமா?

Leave a Response