கர்நாடக முன்னாள் முதல்வர் மரணம்!

tharam

2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை மாநிலத்தின் 17-வது முதல்வராக முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

கார்நாடகா சட்டமன்றத்திற்கு 1978 முதல் 2008-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஏழு முறைதேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், பங்காரப்பா, வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மந்திரி சபையில் மந்திரியாக பதவி வகித்துள்ளார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் அதன்பின் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிடார் மக்களவை உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.

80 வயதான தரம் சிங்கிற்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் மரணம் அடைந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தரம் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Response