மாரடைப்பின் போது உடம்பில் ஏற்படும் அறிகுறிகள்!!

cardiac

• நடு நெஞ்சில் திடீரென வலி ஏற்படும் நெஞ்சை இறுக்குவதுபோல, அமுக்குவது போல, பிழிவதுபோல, அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம். வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும்.

• இவ்வலி சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.

• இவ்வலியானது நடுமார்பின் உள்புறத்தில் ஏற்பட்டு இடது தோழ்மூட்டு, இடது கை, தொண்டை, நாடி, கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவலாம்

• இவ்வலியுடன் கடுமையான வியர்வை, களைப்பு, இளைப்பு, அதனைத் தொடர்ந்து மயக்கம் தோன்றலாம்

• இறந்து விடுவோம் என்ற பயத்தில் மனம் பதற்றமாக இருக்கும்.

• நெஞ்சு வலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் – Silent Attack)
இவ்வாறான அறிகுறிகள் யாவும் ஒருவருக்கு ஏற்படும் என்றில்லை சிலருக்கு இவற்றுள் சில அறிகுறிகளே தோன்றலாம்.
பெண்களில் ஏற்படும் மாரடைப்பின்போது

• மூச்சு எடுப்பதில் சிரமம் (சுமார் 58 விகிதம்)

• உடல் பலவீனமாக காணப்பெறும் (சுமார் 55 விகிதம்)

• வழமைக்கு மாறாக களைப்பாக இருக்கும் (சுமார் 43 விகிதம்)

• உடல் வியர்வையுடனும் குளிந்தும் காணப்படும் (சுமார் 39 விகிதம்)

• தலைப் பாரம், கிறுகிறுப்பு இருக்கும் ( சுமார் 39 விகிதம்)

சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Leave a Response