லஞ்சம் கேட்டதால் ஆர்.டி.ஓ.விடம் புதிய ஸ்கூட்டரை ஒப்படைத்த நபர்!

rto
திருப்பூர் அருகே உள்ள பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

இவர் திருப்பூர் உள்ள ஒரு ஷோரூமில் புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்கினார்.

பின்னர் வாகனத்தின் பதிவு எண்ணை பெற ஷோரூமுக்கு நாகராஜன் வந்துள்ளார். அப்போது வாகனத்தின் எண் பதிய ஆர்.டி.ஓ.வுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பேசிய தொகையை விட அதிகமாக கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார் நாகராஜன்.

இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு புதிய ஸ்கூட்டருடன் சென்றார். அதன் மேல் ஒரு வாசக பலகையும் வைத்திருந்தார்.

அதில் ‘‘ஆர்.டி.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பதிவு செய்யப்படவில்லை. வாகனம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைப்பு’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆர்.டி.ஓ. சந்தித்து மனுவாகவும் கொடுத்தார்.

இதையடுத்து மனுவை பெற்று கொண்ட ஆர்.டி.ஓ., ‘‘ஷோரூம் இருக்கும் இடம், தெற்கு ஆர்.டி.ஓ. எல்லைக்குட்பட்டது. எனவே அங்கு சென்று மனு கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தார்.

இதை ஏற்று அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Leave a Response