முதல்வரை கைது செய்யுங்கள்! மதுரையில் இளைஞர் போராட்டம்!

atappat

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரச்சாரம் செய்த வளர்மதி என்ற மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். பின அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

வளர்மதியை கைது செய்ததை கண்டித்து நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 30ம் தேதி கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திய ஜெயராமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த அறிக்கையையில் தமிழகத்தில் போராட்டத்தைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிவித்திருந்தார்.

மதுக்கடை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மக்களைப் போராடத் தூண்டுவதே எடப்பாடி பழனிசாமி தான்.

manu

மக்களிடையே போராட்டத்தை தூண்டிவிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மதுரை கலெக்டரிடம் இளைஞர்கள் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response