பைக்காரா அணையில் களைகட்டுமா படகுச் சவாரி!

paik
நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் இருந்தாலும் முதன்மையானது இந்த பைக்காரா அணை! தமிழக அரசின் சுற்றுலாத்துறையானது இந்த அணையில் மோட்டார் படகுகளை இயக்குகிறது!
ஊட்டியில் இருந்து 22கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணைக்கட்டில் படகுச் சவாரி செய்வதற்காகவே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாய் குவிவார்கள்!
கடந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால் அணையில் நீர் மட்டம் குறைந்துபோனது. அதனால், முன்புபோல் படகு சவாரி நடைபெறவில்லை. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது. தவிர, மின் உற்பத்தியும், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக நீலகிரி மாவட்டம் முழுதும் பலத்த காற்றுடன் பெய்துவரும் மழையால் பைக்காரா, நடுவட்டம், கூடலூர், பந்தலூர், பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்!
கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழையினால் பைக்காரா அணையின் நீர் மட்டம் 7 அடி உயர்ந்துள்ளதாம்!
‘‘இதேபோல் மழை தொடர்ந்தால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும். படகுச் சவாரியும் களைகட்டும் வாய்ப்புகள் இருக்கிறது’’ என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response