செஞ்சுரி அடித்த நெடுவாசல் போராட்டம்!

neduvasal

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி நெடுவாசல் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இன்று நடைபெறும்போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மற்றும் P.R பாண்டியன் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அக் கல்லுரி முதல்வர் தியாகராஜன் 23 தேதி வரை விடுமுறை அளித்துள்ளார். இதனால் மாணவர்கள் நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

கிரிக்கெட்டில் சதம் அடித்தால் அந்த வீரருக்கு பரிசும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க 100 வது நாளாக போராடியும் அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

Leave a Response