டப்ஸ்மாஷ்ஷில் கலக்கும் விக்ரமின் வாரிசு

vikaram

திரையுலகில் நடிப்பு, இயக்கம், டப்பிங் கலைஞர், பின்னணி பாடகர், இசை ஆல்பங்கள் என பல்வேறு திறமைகளுடன் சுற்றி வரும் முன்னணி நடிகரான சீயான் விக்ரம். இவரின் நடிப்பில் தற்போது துருவநட்சத்திரம், ஸ்கெட்ச் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது வாரிசான துருவ் திரையுலகில் வருவதற்கு முன்பே இணைய உலகில் அறிமுகமாகி பல திறமைகளுடன் கலக்கி வருகிறார்.

துருவ் டப்ஸ்மாஷிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதும் பிரபலமான வசனங்களை தேர்ந்தெடுத்து தனக்கேயுரிய பாணியில் பேசி, அதனை வீடியோவாக உருவாக்கி இணையத்தலங்களில் வெளியிட்டுருந்தார். இந்த ஆப்ஸ் அறிமுகமான புதிதில் துருவ் பேசிய டப்ஸ்மாஷ்களுக்கு, தற்போது இணையத்தில் அதை இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டபார்வையாளர்கள் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம் ’ இந்த வசனத்திற்கு துருவ் காட்டியுள்ள நடிப்பிற்கு புலிக்கு பிறந்தது பூனையில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளார்.

Leave a Response