அதர்வா – சூரி காமெடி கெமிஸ்ட்ரியின் அட்டகாச வெற்றி!

GGSR
கடந்த வெள்ளியன்று ரிலீஸான படங்களில் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!

கதையம்சம் உள்ள படங்களைக் கொண்டாடும் நம்மூர் மக்கள் கதை முன்னேபின்னே இருந்தாலும் ரசிக்கத்தக்க காமெடி இருந்தால் அந்தப் படத்தை ஹிட்டாக்கி விடுகிறார்கள்!

அந்த வகையில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படமும் காமெடியாலேயே வெற்றி பெற்றுள்ளது!

கதையும் இல்லாமலில்லை!

காதல் தோல்வியில் துவண்டு போகிற இளவட்டங்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு புது ரத்தம் ஊறும்’ என இளைஞர்கள் ஜெமினிகணேசனையும் சுருளிராஜனையும் ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலுமாக தூக்கிவைத்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

இமான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அம்முக்குட்டியே’ பாடல் பலரது உதடுகளிலும் மொபைல் போன் பிளே லிஸ்டிலும் கெட்டியான இடம் பிடித்துக் கொண்டுள்ளது!

அதர்வா – சூரி காம்போவின் காமெடி கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் தாறுமாறு ஹிட்டடித்ததில் இந்த காமெடி ஜோடி விரைவிலேயே இன்னொரு படத்திலும் இணையும் என எதிர்பார்க்கலாம்!

இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்களோடு நடித்து ருசி கண்டுவிட்ட அதர்வா அடுத்த படத்தில் லட்டு லட்டாய் ஐந்து ஹீரோயின் கேட்காமலிருக்க வேண்டுமே!

Leave a Response