படத்தின் நாயகன் யமாஹா பைக்!

Yamaha Vandi Movie
அறிமுக இயக்குனர் ராஜிஷ் பாலா இயக்க, ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வண்டி’. இப்படத்தை பற்றி இயக்குனர் ராஜிஷ் பாலா கூறுவதாவது கீழ்வருமாறு…

“வண்டி:
காணமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் கடைசியில் வேறொருவரின் சைக்கிளைத் திருடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு அவன் வாழ்க்கையில் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.

அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ் நாள் சேமிப்பு எல்லாத்தையும் தொடைத்து எடுத்து ஒரு பல்சர் பைக்கை – ஐ வாங்குகிறான். தான் ஆசைப்பட்ட பைக் வந்ததும் அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆணான் என்பதை பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் பார்த்தோம்.’ என படத்தை பற்றி விவரிக்கிறார் இயக்குனர் ரஜீஷ் பாலா.

இந்த படத்தில் யமாஹா RX-135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் அந்த யமாஹா பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பே ‘வண்டி’ என்று பெயர் வைக்கும் அளவுக்கு இயக்குனரை பணியவைத்துள்ளது அந்த யமாஹா பைக்

இப்படத்தில் வித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர்குமார், சாந்தினி, ஜான் விஜய், அருள் தாஸ், சாமி நாதன், மதன் பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைகதை எழுதி இயக்கியுள்ளார் ரஜீஷ் பாலா. படத்திற்கான வசனத்தை அரசு.வி மற்றும் ரஜீஷ் பாலா இனைந்து எழுதியுள்ளனர். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவை செய்ய, ரிசால் ஜெய்னி படத்தொகுப்பினை செய்துள்ளார். பாடல்களை சிநேகன் மற்றும் சங்கீத் எழுத, சூரஜ் எஸ் குரூப் இசையமைத்துள்ளார். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
Chandini Vandi Movie

Vidarth 2 Vandi Movie

Vidarth Madhan Bob Vandi Movie

Vidarth Vandi Movie

Leave a Response