குடி போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் கைது!

bus
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதலிபாளையம் சிட்கோவிற்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த பேருந்தை சண்முகமுர்த்தி அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். காலை நேரம் என்பதால் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிட்கோவிற்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என அதிகமானோா் பயணம் செய்தனா். மேலும் படிக்கட்டுகள் வரை பயணிகள் கூட்டம் இருந்தது.

அப்போது திடீரென சண்முகமுர்த்தி பேருந்தை அதிக வேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கியதாக தெரிகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் ஓட்டுனரை கண்டித்துள்ளனர்.

இதனால் பயணிகளுக்கும், ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகமானதால் ஓட்டுனா் பேருந்தை நல்லூரில் உள்ள திருப்பூர் ஊரக காவல் நிலையம் முன்பு நிறுத்தினார். மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதற்கிடையே சண்முக மூர்த்தியின் நடவடிக்கை மீது காவல் துறையினா் சந்தேகமடைந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

காவல்துறையினர் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பின்னர் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டார் அதில் அவர் குடி போதையில் இருந்தார் என தெரியவந்தது.அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர். திருப்பூர் ஊரக காவல் நிலைய அதிகாரிகள் சண்முகமுர்த்தி கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளன.

Leave a Response