செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

seym
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம். அங்கு தண்ணீர் இல்லாததால் குடிநீருக்காக நீர் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது அதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செம்பரம்பாக்கத்தில் இருந்து குடிநீர் எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதியில் மட்டும், 90மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது விநாடிக்கு 253 கன அடி நீர், ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

Leave a Response