ஆன்லைன் ரம்மி’க்கு தடை மீறினால் கடும் நடவடிக்கை!

rammy
தற்போது நம் உலகில் கம்ப்யூட்டர் மற்றும் ‘ஸ்மார்ட்’ போன்களில், ‘ஆன்லைன் ரம்மி’ விளையாடுபவர்கள் அந்த விளையாட்டுக்கு அடிமையாவதால் தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி, அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்தவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானாவின் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் பெரும்பாலான இளைஞர்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதாக, உளவுத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்களில் ஆன்லைன் ரம்மி என்ற பெயரில், சீட்டாட்டம் விளையாடப்படுகிறது.

பாதி மூளை, பாதி அதிர்ஷ்டம்’ என, விளம்பரப்படுத்தப்படும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு பலரும், பொருளாதார ரீதியில் பணத்தை இழப்பதுடன், தேவையற்ற மன உளைச்சலுக்கும் ஆளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, இது போன்ற விளையாட்டுகளுக்கு, தெலுங்கானா மாநில அரசு தடை விதித்து உள்ளது.

Leave a Response