கடலுக்கு அடியில் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் பவளப்பாறை

pavalam

கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள் சூரிய ஒளியைப் பிரகாசித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்து சுற்றியுள்ள உயிரிகளையும் வாழ வைக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் புவி வெப்பம் காரணமாக இயற்கையின் வரப்பிரசாதமாக இருக்கும் பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பவளப்பாறைகள் நிறைந்த பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கமும், சூழலியல் சுழற்சியும், புவி வெப்பமய கட்டுப்பாடும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பவளப்பாறைகள் புவி வெப்பமயமாதலால் அழிவை சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமுத்திரங்களின் மிகவும் ஆழமான பகுதிகளில் சூரிய ஒளி கிடைப்பது மிக மிக அரிதாக கருதப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகவே இருக்கும். ஆனால் சில வகையான பவளப்பாறைகள் சூரிய ஒளியில் இருந்து ஒளியைப் உறிஞ்சி இரவு நேரங்களில் ஒளியை வெளிவிடுகிறது. இதன்மூலம் ஆழமான பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் சுய ஒளியைப் பிறப்பித்து உயிர்வாழ்வதுடன் மற்ற சிறு உயிரிக்கும் ஒளியை கொடுக்கிறது. பவளப்பாறைகள் வெளியிடும் சூரிய ஒளியின் காரணமாக தான் ஃபைடோப்லண்டென் வளர்கிறது. அவை சிறு உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது.

பவளப்பாறைகள் சிவப்பு நிறத்தில்தான் இயல்பாக இருக்கும். ஆனால் சூரியஒளியில் உள்ள கதிர்களை உமிழ்ந்து அது ஆரஞ்சு-சிவப்பு நிறமாக மாற்றுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பவளப்பாறைகள் அழிந்து வருவதால் அங்குள்ள சிறு உயிரினங்களும் அழியும் அபாயம் இருப்பதாகவும் சவுத்தாம்ரன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Response