நாடு முழுவதும் மாட்டிறைச்சியின் தடை நீங்கியது!

adimadu
கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கும் விதிகள் அடங்கிய அறிக்கையால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மே 25ஆம் தேதி வெளியிட்டது.

தனிநபர் உரிமைகைள் தலையிடும் செயல் எனக்கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை மத்திய அரசின் அறிக்கையை கடந்த மே 30 ஆம் தேதி தடை விதித்தது. அதன் பின் மேல்முறையிடு செய்யப்பட்டு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணை நடைப்பெற்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நாடு முழுவதும் நீட்டித்தாலும் ஆட்சேபணையில்லை என மத்திய அரசு அறிவித்தது. நீதிபதி கூறுகையில் கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடை நாடு முழுவதும் நீங்கியுள்ளது. என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Leave a Response