யானும் தீயவன் விமர்சனம்…

yaanum-theeyavan-2016
தங்கள் காதலுக்கு பெற்றவர்கள்’ பெரிதாக மறுப்பு சொன்னதால், நண்பர்கள் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்ட அஸ்வினும், வர்ஷாவும், அதே நட்புஉதவியுடன் நகருக்கு ஒதுக்குப் புறமானஒரு வீட்டில் சில நாட்களுக்கு வசிக்கின்றனர். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில், அஸ்வினிடம் ஏற்கனவே ஒரு பிரச்சினையில் அடி உதைப் பட்டு முகத்தில் கோர தழும்பும் வாங்கி, அஸ்வினைத் தேடி வரும் தாதா ராஜுசுந்தரமும் அவரது ஆட்களும் தலைமறைவு வாழ்க்கை நடத்துவது அஸ்வினுக்குத் தெரியாது. இந்நிலையில் ராஜு சுந்தரம் அந்த வீட்டில் வைத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வந்த ஒரு பெண்ணை கொலை செய்ய, அதை அஸ்வினின் காதல் மனைவி வர்ஷா பார்த்து விட்டு அஸ்வினிடம் கூற, இருவரும் அங்கிருந்து தப்பித்து போகத்தயார் ஆகும் சூழலில், அங்கு நிற்கும் அஸ்வினின் காரை வைத்து அவரையும், வர்ஷாவையும் சுற்றி வளைக்கும் ராஜூ சுந்தர மும், அவரது ஆட்களும் அஸ்வின் – வர்ஷா ஜோடியை அலேக்காக த தூக்கி தங்கள் பழைய பகையை தீர்த்துக் கொள்ள சித்ரவதை செய்கிறார்கள்.

வர்ஷாவை அனுபவித்து விட்டு பின், அவரையும், அஸ்வினையும் அடித்துக் கொல்ல நினைக்கும் ராஜூ சுந்தரத்தின் எண்ணம் ஈடேறியதா? அல்லது அஸ்வினின் ஆக்ஷன் அவதாரத்தால் தவிடு பொடியானதா? என்னும் வினாவிற்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை சொல்ல முயன்றிருக்கிறது “யானும் தீயவன்” படத்தின் கதை மொத்தமும்!

அஸ்வின் ஜெரோம் கதாநாயகராக அறிமுகம் ஆக, அவருடன் வர்ஷா, ராஜூ சுந்தரம், பொன்வண்ணன், விடிவி.கணேஷ், சந்தானபாரதி, மதுமிதா, மீரா கிருஷ்ணன் ஆகிய நட்சத்திரங்கள் நடிக்க, பிரஷாந்த் ஜி.சேகர் இயக்கத்தில், ‘பெப்பி சினிமாஸ் ‘தயாரிப்பில் வந்திருக்கும் “யானும் தீயவன்.” படத்தில் வழக்கமான தாதாயிஸத்தை வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. அதை, இன்னும் சற்றே விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.

Leave a Response