பி.ஜே.பி.யின் தேசிய செயலளர் H.ராஜாவை கைது செய்ய கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த இந்திய தேசிய லீக் கட்சியினர்!

djp
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த மலைமேகம், என்பவறின் மகன் அஸ்வின்குமார். இவர் பி.ஜே.பி கட்சியின் நகர செயலாளர் ஆவார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒரு மர்ம கும்பல் காரில் வந்து தாக்க முயன்றனர் அப்பொழுது அஸ்வின்குமாரின் தந்தை மலைமேகம் இடையில் வந்து தடுக்க முயன்ற போது அவர் கைகளில் ஒரு வெட்டு விழுந்தது. இதில் அச்வின்குமரும் தாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நடந்தவுடன் காவல்துறை தனது புலன் விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே பி.ஜே.பி. தேசிய செயலாளர், H. ராஜா அவர்கள் தன்னுடைய லெட்டர் பேடில் செய்திகளை வெளிஎடுகிறார். அதாவது பி.ஜே.பி. நகர் செயலாளர் அஸ்வின்குமார் தாக்கப்பட்ட போது அஸ்வின்குமார் தந்தை பயங்கரமாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் எனவும், இந்த கொலை தாக்குதல்லில் சம்மந்த பட்ட முஸ்லிம்களை காவல்துறையினர் கைது செய்யாமல் சூழ்ச்சி செய்கிறது. ஆகையால் தமிழக முதலவர் உடனே நடவடிக்கை எடுத்து அச்வினை கொலை செய்ய முயன்ற அந்த முஸ்லீம்களை கைது செய்ய வேண்டும் என அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையை தொடர்ந்து நாராயணன் K.T. ராகவன் போன்றவர்களும் இன்னும் பி.ஜே.பி.யை சேர்ந்த பலரும் தங்களது முகநூல் பக்கம் உளப்பட சமுக வலைதளங்களில் செய்திகளை பரப்பினார்கள் அதன் எதிரொலியாக ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் கற்களை கொண்டு தாக்குதல் தொடுத்தனர்.

தற்ச்சமயம் பி.ஜே.பி.யின் நகர செயலாளர் அஸ்வின்குமார் தாக்குதல் சம்மந்தமாக கமுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), முத்துராமலிங்கம் (வயது 39), மணிகண்டன் (வயது 38), டிரைவர் சதிஷ்குமார் (வயது 22) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்த்துறை. முத்துராமலிங்கத்திற்கும் அஸ்வினுக்கும் ஏற்ப்பட்ட முன்விரோதத்தால் முத்துராமலிங்கம் பழி தீர்ப்பதற்காக இந்த சம்பவம் நடந்தேறியதாக காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோம்பு இருந்துவரும் வேளையில் மத கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் பி.ஜே.பி. ஆட்சியின் வளர்ச்சி அடிய செய்யவே H. ராஜா அஸ்வின்குமார் தாக்குதல் சம்பவத்தை வைத்து இந்து-முஸ்லீம்களின் ஒற்றுமையை கொலைத்து கலவரத்தை தூண்ட முயன்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகையால் தன்னுடைய லட்டர் பேடில் பகிரங்கமாக மத மோதல்களை உருவாக்க முயன்ற பி.ஜே.பி.யின் தேசிய செயலளர் H. ராஜா மற்றும் முகநூல் வாயிலாக மதக்கலவரங்களை தூண்ட முயன்ற பி.ஜே.பி.யை சேர்ந்த நாராயணன் K.T.ராகவன் ஆகிய மூன்று போரையும் தமிழக காவல்த்துறை இயக்குனர் ஐயா அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்குமார் இந்திய தேசிய லீக் கட்சியினர் கோரியுள்ளனர்.

இந்த மனுவோடு H.ராஜா அவர்களின் அறிக்கையின் நகல், நாராயணன் அவர்களின் முகநூல் பதிவு நகல், மற்றும் K.T.ராகவன் அவர்களின் முகநூல் பதிவு நகலையும் இணைத்துள்ளனர்.

Leave a Response