‘அண்டாவ காணோம்’ இசை வெளியீடு…

sreya
திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் அவர்களின் அண்ணன் மனைவியும் ஆவார். ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகி நடித்து வெளியாகும் படம் தான் ‘அண்டாவ காணோம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் வெளியிட்டனர்.

இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

Leave a Response