சென்னையில் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்தது…

thaakam
சென்னையில் இரண்டு மாதகாலமாக கொளுத்தி வந்த வெயில் தாக்கம் குறைய போகுதாம். வாங்க என்னனு தெரிஞ்சிக்கலாம்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று மதியம் பெய்த லேசான மழை மற்றும் இரவில் ஆங்காங்கே பெய்த மழை காரணமாக வெப்பம் சற்று தணிந்துள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் புரசைவாக்கம், கோடம்பாக்கம், பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து வெப்பநிலை சற்று தணிந்தது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் நிலையில் சென்னையில் நேற்று மழை பெய்துள்ளது. இது இன்னும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, புதுச்சேரி, வேலூர் மாவட்டங்களுக்கும், டெல்டா பகுதிகளுக்கும் அடுத்த ஒரு சில நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வானிலை ஆய்வு மையத்தால் உறுதி செய்யப்படவில்லை என்றும், அடுத்த 3 நாட்களில் சென்னையில் பரவலாக 2 முதல் 5 செ.மீ. மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் வானிலை பிளாகர் கே. ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் பல நாட்கள் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவை விட அதிகமாக இருந்தது. தொடர்ந்து சில நாட்கள் 40 டிகிரியை தாண்டியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மே 18ம் தேதி மீனம்பாக்கத்தில் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இது சென்னையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response