“ஒண்டிக்கட்ட” இசை வெளியிட்டு விழா…

ondi
பிரண்ட்ஸ் சினிமீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ்,ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரித்து, விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக, நேகா நாயகியாக நடித்துள்ள படம்தான் “ஒண்டிக்கட்ட”. இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம்,
ஆகியவற்றை செய்துள்ள இசையமைப்பாளர் பரணி இசையும் அமைத்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படக்குழுவினர் மேலும் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளராக எஸ்.எ.ராஜ்குமார், தீனா, சத்யா, அம்பரீஷ், மற்றும் இயக்குனர்கள் மனோஜ், சனா, சாய் ரமணி, சந்திரசேகர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் பரணி படத்தை பற்றி கூறியதாவது: நான் இசையமைப்பாளராக என் பயணத்தை துவங்கி 18 வருடங்களாகி விட்டது.
இது வரை எனக்கு கிடைத்த அனுபவங்களையும் கற்றுத் தேர்ந்த விஷயங்களையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். கிராமத்து நாகரிகத்தை இதில் பதிவிட்டிருக்கிறேன். படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பிறந்த போதும் ஒண்டிக்கட்டையாகத்தான் பிறக்கிறோம். போகும் போதும் ஒண்டிக்கட்டையாகத் தான் போகப்போகிறோம். இதைத் தான் இதில் சொல்கிறோம்.

இந்தப் படத்தினை விக்ரம்ஜெகதீஷ் ஆர்.தர்மராஜ் நேகா இந்த மூவரும் தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்கள். ஆர்.தர்மராஜுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். நிச்சயம் மக்களுக்கு இது பிடிக்கும். ஒண்டிக்கட்டை படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார் பரணி.

இதனை தொடர்ந்து பேசிய கதாநாயகன் விக்ரம் ஜெகதீஷ், தான் சினிமா துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆனது மிகவும் போராடினேன் என்றும் பரணி சார்தான் தனக்கு வாழ்கை அளித்ததாகவும் புகழாரம் சுட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் காசை காத்தாக செலவு செய்துள்ளனர் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் பேசி முடித்தபின் இறுதியில் படத்தின் இசை தட்டினை நான்கு இசையமைப்பாளர் வெளியிட நான்கு இயக்குனர்களும் இசை தட்டை பெற்று கொண்டனர்.

Leave a Response