நடிகை பூஜாகுமார் கமலின் ‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து ‘மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடிக்கும் ‘கருடா வேகா’ என்ற படத்தில் பூஜாகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் கிஷோர் நடிக்க, இந்தி நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாடுகிறார். பிரவீண் சத்தரு படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பூஜாகுமார் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்வாதி என்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் 6 வயது குழந்தைக்கு தாயாராக நடிக்கிறாராம். முதலில் குழந்தைக்கு தாயாகாக நடிக்க வேண்டும் என்றதும் சற்று தயங்கிய பூஜாகுமார், டைரக்டர் அந்த கேரக்டருக்கு கதையில் இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி சொன்னதும் மறுக்காமல் சம்மதித்துவிட்டார்.
மேலும், படத்தில் மேக்கப் இல்லாமல் ஏழை பெண் வேடத்தில் எளிமையான கெட்டப்பிலேயே பூஜாகுமார் நடித்து வருகிறார்.