சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு : காவல்நிலையங்களில் புகார்களைப் பெற புதிய திட்டம்…

viswa
காவல்நிலையங்களில் பொதுமக்கள் தங்களது குறைகளையும், புகார்களையும் மனுக்களாக தருவதற்கான புதிய திட்டம் வரவிருக்கு அது என்னனு தெரிஞ்சிப்போம் வாங்க.

அதாவது சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், காவல்நிலையங்களில் புகார் மனுக்களைப் பெற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

காலையிலும், மாலையிலும் காவல்துறை ஆய்வாளர் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிவார். காலை 11 மணி முதல் 12.30 மணி வரையிலும், இரவு 8-9 மணி வரையிலும் ஆய்வாளரை சந்திக்கலாம். மிகவும் அவசரமான பிற நேரங்களிலும் மனுதாரர்கள் காவலர்களை சந்திக்கலாம்.

அவசரமில்லாத புகார்களை, காவல்துறை ஆய்வாளரை சந்தித்து இந்த குறிப்பிட்ட நேரங்களில் அளிக்கலாம். அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஆன்லைனில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல காவல் சேவையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Response