மகராஷ்டிராவில் விவசாயிகள் வேலை நிறுத்தம்…

maharastra2
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது , இலவச மின்சாரம், விளை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிப்பது , விவசாயிகளுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மகராஷ்டிர மாநில அரசுக்கு அம்மாநில விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இது குறித்து மகராஷ்டிர மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என மகராஷ்டிர விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனிடையே மகராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில், விவசாயிகளிடம் கடந்த செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே திட்டமிட்டபடி, மகராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். பழங்கள், பால் போன்றவற்றை சாலையில் கொட்டி அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
maharastra

Leave a Response