தீபாவளியை அதிரவைக்க வருகிறது ஜியோ பைபர்…

jio
ஏற்கனவே ஜியோவின் இலவச சேவைகளை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறது. தற்பொழுது தீபாவளிக்கு ஒரு புதிய சேவை வர இருக்கிறது. அது என்னனு வாங்க படிப்போம்.

தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ஜியோ பைபர் வணிகச் சேவைகளை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 500/- என்ற விலை நிர்ணயத்தில் 100ஜிபி அளவிலான டேட்டாவை பயனர்கள் பெற முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, டெல்லி-என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் நிறுவனம் இலவசமாக அதன் ஜியோ பைபர் சோதனை முன்னோட்டம் என்ற பெயரின் கீழ் இலவசமாக அதன் பிராட்பேண்ட் சேவை இந்த மாதத்திற்கு முன்னதாக ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த ஜியோ ஹோம் பிராட்பேண்ட் அல்லது பைபர்-டூ-தி-ஹோம் (FTTH) சேவையானது ஹோம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அதாவது – ஸ்மார்ட்போன்கள் / டேப்ளெட்கள் மூலம் மின்னணு பொருட்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடைக்கியது. மேலும் இவை அனைத்தையும் பயனர்கள் அவர்களின் ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும் ஜினியோ நிறுவனம் வீட்டு கண்காணிப்பு தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Response