ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி துவங்கியது…

malar
என்ன மக்களே வெயிலோட தாக்கம் தாங்க முடியலையா. வாங்க அப்போ ஏற்காட்டுக்கு போலாம் ஏன்னா ஏற்காட்டுல மலர் கண்காட்சி ஆரம்பிச்சுட்டாங்க.

அதாவது ஏழைகளின் உதகமண்டலம் என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 42வது கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ளது. அண்ணா பூங்காவில் 3 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. 1 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது இந்த கண்காட்சி. இங்கு சாரல் மழையுடன் கோவை விழாவும் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்கு குறைவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரிப்பன் வெட்டியதும் தொடங்கியது 3 நாள் மலர் கண்காட்சி. 1 லட்சம் மலர் அணிவகுப்பில் கொரில்லா, பாண்டா கரடி, நடன மங்கை என மலர் அலங்காரத்தில் ஜொலித்தன. ஏற்காடு பூக்களும், அயல்நாட்டின் அரியவகை மலர்களும் காண்போரின் கண்களுக்கு விருந்து படைத்தன.

மலர் கண்காட்சியுடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் கோடை விழாவில் கலை கட்டியது. மலையால் சேதமடைந்த மலர் தொட்டிகள் அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டன. முதல்வரின் வருகையையோட்டி மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர். இருபது அடிக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் குறைவில்லை.

Leave a Response