மின்சார சிக்கனத்திற்கு அரசின் விலைக் குறைந்த எல்.இ.டி பல்புகள்…

matya
வரும் காலத்தில் வரும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டுவருகிறது. அது என்ன வென்று பாப்போம் வாங்க.

மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு மத்திய அரசு உஜாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டத்தின் மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு எல்.இ.டி பல்புகள், எல்.இ.டி டியூப் லைட்கள், மற்றும் மின் விசிறிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு 3 கோடி எல்.இ.டி பல்புகளையும், 35 லட்சம் எல்.இ.டி டியூப் லைட்களையும், 10 லட்சம் பேன் களை வழங்க முடிவு செய்துள்ளது. இவை முதற்கட்டமாக சென்னையில் உள்ள டேன்ஜெட்கோ நிறுவன அலுவலகங்கள் உள்ள 60 இடங்களில் விற்பனைக்கு வருகிறது.

150 ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி பல்புகள் இங்கு ரூ.60-க்கு விற்கப்படும். எல்.இ.டி டியூப் லைட்கள் ரூ.230-க்கும் , மின்விறிசி 1, 150-க்கு விற்க்கப்படும். இந்த விலையானது சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு குறைவாகும். மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 எல்.இ.டி பல்புகளும் , 4 எல்.இ.டி டியூப் லைட்களும் , 2 மின் விசிறிகளை ஆதார் கார்டை காட்டி வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1.10 லட்சம் வீடுகள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response