அறிமுகமாகும் முதல் ரோபோ போலீஸ்…

robo police
வளைகுடா நாடுகளின் நான்காவது தகவல் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் துபாய் அரசு உலகின் முதல் ரோபோ போலீசை அறிமுகம் செய்தது.

இந்த ரோபோ போலீஸ் 5 அடி உயரமும் 100 கிலோ எடையும் கொண்டது. ஆறு மொழிகளில் பேசும் இந்த ரோபோவில் உள்ள ஃபேஷியல் சென்சார், குற்றம் செயல்கள் புரிபவர்களை அடையாளம் காண உதவுகிறது.

ரோபோகாப் (Robocop) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவுடன் டேப்லெட் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு காவல்துறையின் பல்வேறு சேவைகள் பொதுமக்கள் பெற முடியும்.

Leave a Response