சென்னையில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைமையில் நடந்தது. இதன் பிறகு மின்சார பேருந்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின்னர் மின்சார பேருந்தின் சோதனை ஓட்டம் மெரினா கடற்கரை சாலையில் நடந்தது.
ஒரு தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் செய்யப்பட்ட பேருந்தில் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டால் சுற்றுசச்சூழலுக்கு அதிக நன்மை ஏற்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.