எச்சரிக்கை : அதிகரித்து வரும் போலி டாக்டர்கள்…

poli
ஆமாங்க நம்ம நாட்டுல கலப்படம் தான் எங்க திரும்பனாலும் அதோட விளைவுகள் பின்னாடி தான் தெறிது. இப்போ என்ன சொல்ல வரேன் கேக்குறிங்களா.

தேனி மாவட்டம் தாவாரத்தில் வினோத் ராய் என்பவர் மருத்துவமனை மற்றும் மருந்துக்கடைகளை நடத்தி வருகிறார். அவர் தன்னிடம் நோயாளிகளுக்கு பதிவுசெய்த மருத்துவரான வீரண்ணன் கண்ணன் என்பவரின் மருந்துச்சீட்டுகளில் மருத்து எழுதிக்கொடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

மருத்துவர் அமுதினி வினோத் ராய் குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ராய் மருத்துவர் கண்ணனின் மருந்துச்சீட்டை மாதம் ரூ.25 ஆயிரம் கொடுத்து பெறுவதாகக் கூறியதாவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர் கண்ணன் மற்றும் வினோத் ராய் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாகவுப் அவர்களில் 100 பேரை தமிழக அரசு கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாகவும் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1996-ன் படி மருத்துவ கவுன்சிலில் பெயரைப் பதிவுசெய்து பதிவு எண் பெற்றவர்கள் மட்டுமே மருத்தவப்பணியை மேற்கொள்ள முடியும். அலோபதி மட்டுமின்றி சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட வேறு எந்தவிதமான மருத்துவ முறையைப் பின்பற்றுபவர்களும் பதிவுசெய்திருந்தால் மட்டுமே மருத்தும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், போலி மருத்துவர்கள் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குத் தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகிறார்கள்.

Leave a Response