பேஸ்புக்கில் வரவிருக்கும் புதிய வசதி…

fb
நம்ம இப்போ உள்ள தலைமுறையில் 24 மணிநேரம் பேஸ்புக்கில் பலர் குடும்பம் நடத்துகின்றனர். அவர்கள் நலன் கருதி ஒரு சேவை வரவிருக்கு. என்னடா வசதி தெரிஞ்சிக முழுசா படிங்க.

சமூகவலைதளங்களில் மிகவும் முக்கியமான வலைதளம் பேஸ்புக். பேஸ்புக்கை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்திவருகிறனர். அப்போது தனது சேவைகளில் புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் , தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வரும் அக்டோபர் மாதம் முதல் உணவுக்கு ஆர்டர் செய்யும் புதிய வசதியை நடைமுறைப்படுத்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் ஆர்டரிங்க் என்ற இந்த வசதி மூலம் உணவகங்களின் இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்தாமல், பேஸ்புக் மூலமே உணவுக்கு ஆர்டர் செய்யலாம்.

பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்உணவகங்களிடம் இருந்து உணவை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கலாம் என்று பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வசதியானது முதலில் அமெரிக்காவிலும் பின்னர் உலகமெங்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response