ஏழு நாட்களில் தட்டையான வயிற்றை பெறவேண்டுமா இதோ உங்களுக்கான டிப்ஸ்…

ki-3
முருங்கைக்கீரையின் பல்வேறு மருத்துவ நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால் அது நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – 1/4 கப்

தண்ணீர் – 1 கப்

எலுமிச்சை – 1/2

தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முருங்கைக் கீரையை 1 கப் நீர் ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்தால், ஜூஸ் ரெடி.

முருங்கைக் கீரை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் . இரவு உணவு சாப்பிட்ட 1/2 மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள் இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும்.

இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

தவிர, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

தொடர்ந்து ஏழு நாட்கள் ஜூஸை குடித்த பின், இடைவெளி விட வேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது.

Leave a Response