MP3 தொழில்நுட்பம் விடைபெறுகிறது…..

iBasso-DX50-Portable-MP3-Player-w-Headphone-AMP-24Bit-192kHz-8740-DAC-Gift
இதுவரை நம் உபயோகித்து வந்த எம்.பி 3 தொழில்நுட்பம், இனி உபயோகத்தில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடல்களின் மின்னணு கோப்புகளை 95 சதவீத அளவுக்கு குறைக்கும் திறன் பெற்றது எம்.பி 3 தொழில்நுட்பம். இதன் காரணமாக சிறிய இடத்திலும், அதிக பாடல்களை பதிவேற்றம் செய்ய முடியும். எனவேதான் சிடிக்கள் மற்றும் செல்போன்கள் பிரபலமாகத் துவங்கிய காலத்தில், உலகெங்கும் எம்.பி 3 முறையில் பாடல்கள் பதிவு செய்யும் முறை சக்கை போடு போட்டது.

கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த எம்.பி 3 தொழில்நுட்பத்தின் லைசென்சை திரும்பப் பெறுவதாக, அந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்த பிரான்ஹோஃபர் என்ற நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக தொழில்நுட்ப உலகிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது எம்.பி 3 தொழில்நுட்பம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எம்.பி 3க்கு அடுத்தகட்டமாக பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதாலும், அந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தற்போதைய மின்னணு சாதனங்களை தயாரிக்கப்பட்டு வருவதாலும் இந்த முடிவை பிராம்ஹோபர் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response