இன்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

mtc strike
நம் நாட்டில் அரசியல் பிரச்சனையில் மக்கள் தான் அவதிப்பட்டனர் என்று பார்த்தால் மறுப்பக்கம் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அவதிப்பட்டு வந்து உள்ளனர்.

இந்நிலையில் இதன் விளைவாக இன்று முதல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அதாவது தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக 13வது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை. இதுதொடர்பாக கடந்த ஜனவரி 30ல் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அரசிடம் மனு அளித்தனர். ஓய்வூதியர் பணப்பலன்கள், போக்குவரத்துக் கழக நஷ்டம் உள்ளிட்டவற்றை அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக கடந்த மார்ச் 7ல் துவங்கி நேற்று வரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு எட்டப்படாததால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

இதன் படி இன்று அதிகாலை முதலே கோயம்பேடு உட்பட மாநகர பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆட்டோக்கள், டாக்ஸிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பேருந்து இல்லாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓடிய அரசுப்போருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

Leave a Response